Saturday, March 25, 2006

'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.எஸ்...


உங்கள் குரல்...

தலைப்பாகை கட்டிய தமிழ் !

சந்திர ஈரமும் சூரிய வீரியமும்

சேர்த்துச் செய்த சுடர் கவிதை !
நீங்கள்...


சங்கீதத் தமிழின்

சாமுத்திரிகா லட்சணம்!

சிங்க நடை நான் பார்த்ததில்லை....

கேட்டிருக்கிறேன் உங்கள் குரலில் !

ஆழ்வார்கள்இ நாயன்மார்கள் காலத்தில்
யான் வாழ்ந்தவனில்லை.

ஆனால் அவர்களோடு வாழ்ந்திருக்கிறேன்...
உங்கள் தமிழில் !
உங்கள் குரல் என்னும் மயில்வாகனத்தில் மிதந்து சென்று
முருகனோடு கதைத்திருக்கிறேன்.கற்பகவல்லியின்

பொற்பத தரிசனம் பெற்றிருக்கிறேன்.புல்லாங்குழல்

வெளிச்சத்தில் ஆனந்தமாய் அழுதிருக்கிறேன்.

திருமால் பெருமைக்கு நிகரேது ? பாடலில்..

தசாவதாரங்களை அப்படியே படம் பிடித்து வந்த
உங்கள் ஆன்மீக அற்புதமும்...திருவிளையாடல் திருவருட்செல்வர் படப் பாடல்களில்


காற்றின் தேசமெங்கும் விபூதியும்இ பஞ்சாமிர்தமும் பொழிந்த


உங்கள் கற்பக குரல் நயமும்...


பட்டினத்தார்இ அருணகிரிநாதர் படப்பாடல்களில்


உங்கள் உச்சரிப்பு அர்ச்சனையால்


என் நெஞ்சில் சந்நிதானத் தமிழ் தந்த சாந்தியும்...
இன்று நினைத்தாலும்


நல்லைக்கந்தனின் மணியோசைபோல
என் நெஞ்சை நனைக்கிறது.


எம்.ஜி.ஆருக்காக நீங்கள் பாடும்போது...
என் ஜீவன் வரைக்கும்


ஓராயிரம் உற்சாக மின்னல்கள் துள்ளிக் குதிப்பதை
என்னால் உணர முடிகிறது.


இந்த உன்னதம். எங்கிருந்து வந்தது?


விழக் கூடாத அடிகள் விழுந்த போதெல்லாம்...என் முழுக் கட்டுப்பாட்டில் முடங்கிக் கிடந்த கண்ணீர் ....


சிவாஜிக்காக செதுக்கப்பட்ட சோகங்களை
நீங்கள் சொல்லும்போது மட்டும்

சொல்லாமல் கொள்ளாமல் ஒடி வந்து
என் கண்களில் பனித்திரை கட்டுகின்றதே....


இந்த மகத்துவம் உங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?
நட்சத்திரங்களையும் கதாபாத்திரங்களையும்


அகக் கண்ணில் அடையாளம் காட்டுகின்ற தமிழ்ச் சித்து
உங்கள் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த


குயில் சொத்து என்பதை காற்றறியும் ...

தமிழர் காதறியும்.


தத்துவப் பாடல்களைப் பாடும்போது...


பாத்திரத்தின் இதயத்துடிப்பையும்


பாடலாசிரியரின் ஆத்மத் துடிப்பையும்


உங்களுக்கே உரிய சங்கீத சாகசத்துடன்
குரல் கணனியில் சுமந்து வந்து


காற்றின் செவி வாங்கிகளில் சேர்த்துச் செல்கின்றீர்களே...


எங்கு கற்றீர்கள் இந்த விஞ்ஞானத்தை ?'மன்னிக்க வேண்டுகிறேன்' பாடலை
பி.சுசீலா அவர்கள் ஆரம்பித்ததும்


ஐந்தாவது வரி வரை வேடிக்கை பார்த்துவிட்டு
ஆறாவது வரியில் 'தித்திக்கும் இதழ் உனக்கு' என்று
இசைமுத்திரை பதித்துக் கொண்டே


சிறகுயர்த்தும் உங்கள் குயில் குதூகலத்தை விளக்க
தற்சமயம் தகுந்த வார்த்தைகள் இல்லை.'நான் காற்று வாங்கப் போனேன்'
பாடலில்


நடைபழகும்போது தென்றல்
விடை செல்லிக் கொண்டு போகும்..


அந்த அழகு ஧ன்று போதும்..


நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்...


என்று நீங்கள் பாடும்போது...


'நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்' என்ற இடத்தில்
'நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்' என்ற இடத்தில்


அழுத்தமாக ஒரு குயில் வித்தை செய்துவிட்டு..


மீண்டும் பல்லவிக்குப் பாய்வீர்களே...


அப்போது எங்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போனது
அவள் அழகா ?


உங்கள் தமிழா ?


காதல் பாடல்களில்


உங்கள் குரலிலே மிளிரும்
கொஞ்சலும்.. கெஞ்சலும்...


கரும்பும் குறும்பும்...


பாவமும் போதையும்....


பல சமயங்களில் கம்பனையும் மிஞ்சுமே...!


இந்த சிருங்காரம் எங்கிருந்து கற்றது ?


உங்கள் சந்தோஷ சங்கீதம் கேட்டால்
நெஞ்சம் சிறகுகள் உயர்த்தி


சந்திர மண்டலம் தாண்டி சிலிர்க்குமே...
இந்த மாயமும் மதுரமும் எங்கிருந்து பெற்றது ?

'செல்லக்கிளியே மெல்லப் பேசு' என்றுதென்றலின் ஊஞ்சலிலே பிள்ளையாய் என்னை உட்கார வைத்து...
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே என்று
பாசராகம் ஊட்டி வளர்த்தீர்களே...
மறக்க முடியுமா அந்த மணித் தமிழை..?
வெள்ளி நிலா முற்றத்திலே பாடலில்
என்னையும் ஒரு பிள்ளை நிலாவாக தவழவைத்து...
பாசமும் வீரமும் பாட்டிலே குழைத்து
நிலாச்சோறு தந்தீர்களே...
இந்த பாட்டுப் பாசங்களை எல்லாம்
இன்று நினைத்தாலும்
பிஞ்சுக் குழந்தையாய்
மீண்டும் பிறவியெடுக்கின்றேன்.

அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்று
ஊமையாக இருந்து கதாபாத்திரத்திற்காக நீங்கள் பாடிய போது
ஆமையாக இருந்த எனக்கும் சேர்த்துத்தான் நீங்கள் பாடுகின்றீர்கள் என்ற


திடமான கற்பனையில்
என்னையும் புடம் போட்டிருக்கின்றேன்.யார் தருவார் இந்த அரியாசனம் ? என்று
நீங்கள் பாடியபோது
தகுதிக்கு மீறி எனக்குக் கிடைத்த மரியாதைகளை

நினைத்து நெக்குருகினேன்.

இசையால் வசமாகா இதயமெது? என்று


நீங்கள் பாடியபோது


இரைச்சல் சூழலின் இயந்திரச் சிறையிலிருந்து


மூன்று நிமிட விடுதலை கிடைத்து முழுதாய் மகிழ்ந்தேன்.
நீலாம்பரி ராகத்தில் அமைந்த


பல்லவன் பல்லவி பாடட்டுமே பாடலைப்பற்றியும்
உள்ளம் இனிக்க


இங்கே உரைக்கத்தான் வேண்டும்.
சங்கீத சலங்கை கட்டி


உல்லாசமாக ஆடும் உங்கள் குரல் நடனத்தை
செவிகளால் பார்த்து


எத்தனை முறை நானும்

அபிநயித்திருப்பேன்!....அறிவீர்களா ?


ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் என்று


சோகங்களை இறைவனிடம் சொல்லத் துடிக்கும்


ஒரு அப்பாவிக்காக நீங்கள் பாடும்போது.....


அந்த சோகங்களைக் கூட சிரித்துக் கொண்டே
உற்சாகமாகச் சொல்வீர்களே


அப்படி உற்சாகமாகச் சொல்லும்போது கூட


கதாபாத்திரத்தின் கண்ணீர்த் துளிகள் காய்ந்து விடாமல்


பார்த்துப் பார்த்து பக்குவமாக சொன்னீர்களே.. ..


அந்த வித்துவம் கண்டு அதிசயித்தேன் !


ஒளிவிளக்கு... திரைப்படத்தில்


மக்கள் திலகத்தின் மனச்சாட்சி பாடுவதாக வரும்


தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா ?


பாடலில்

எம்.ஜி.ஆரின் உற்சாக பாணி மாறாமல் பார்த்துக்
கொண்டு


அதே சமயம் சொல்ல வந்த தத்துவத்தை


புத்தனைப்போல் வாசித்த உங்கள் சங்கீத சாமர்த்தியம் கண்டு


பித்தனைப் போல் உங்களைப் பின் தொடர ஆரம்பித்தேன்.
கேட்டவரெல்லாம் பாடலாம் ..


பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்...


பூவினும் மெல்லிய பூங்கொடி....


உலகம் பிறந்தது எனக்காக ... ...


பாடல்களில் நீங்கள் ஊட்டி வளர்த்த ஊஞ்சல் உற்சாகமும் -
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் நீங்கள் ...
காற்றுக்கு ஊற்றித் தரும் அருவ மதுவும் -
இரண்டு மனம் வேண்டும் பாடலில்
திரண்டு நிற்கும் கண்ணீர்த் துளிகளும் -யாருக்காக ? பாடலில்

நீங்கள் காட்டும் சோக கம்பீரமும் -

ஆறுமனமே ஆறு பாடலில்

அலட்டிக் கொள்ளாமல் நீங்கள் ஏற்றிச் செல்லும்
விவேகானந்த தீபமும் -


ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை..
மணப்பாறை மாடு கட்டி..


போட்டது முளைச்சுதடி கண்ணம்மா..


பாடல்களில் கிராமிய மண் வாசனையை
கிராமபோன் வரைக்கும் வீச வைத்த
கீர்த்தியும் குயில் நேர்த்தியும் -


வீடு வரை உறவு ...


போனால் போகட்டும் போடா..


மனிதன் நினைப்பதுண்டு... பாடல்களில்


கவி அரசின் நிலையாமைத் தத்துவங்களை
புவி சிலிர்க்க அறைந்து சொன்ன அருமையும் பெருமையும் -பொன்மகள் வந்தாள் பாடலில்

பொங்கும் பூம்புனலாய் நெஞ்சை நனைத்த
உங்கள் குபேர பூரிப்பும் -

யார் அந்த நிலவு பாடலில்

ஆங்கில அலட்சியம் காட்டியே
உள்ளப் போராட்டங்களை உணர்த்திய யுக்தியும் -


சோதனை மேல் சோதனை.....


உன்னைச் சொல்லிக் குற்றமில்லை....


ஒராயிரம் பார்வையிலே....


பல்லாக்கு வாங்கப் போனேன் ....


மயக்கம் எனது தாயகம்....


அண்ணன் காட்டிய வழியம்மா.....


ஏன் அழுதாய் ஏன் அழுதாய்....


சுமை தாங்கி சாய்ந்தால்....


எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் ....போன்ற பாடல்களில்


தமிழைப் பிழிந்து சோகத்தைச் சொன்ன
காவியத் தரமும் -


தேவனே என்னைப் பாருங்கள் பாடலில்

உங்கள் குரலிலே தெரிந்த
உருக்கமும்இ ஒளி தாகமும் -
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது பாடலில் தகித்த...

எந்த இரும்பு மனதையும்
ரகசியமாய் அழ வைக்கும் ஏக்கப் பெரு மூச்சும் -

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலில்

புன்னகை பூசிய பிள்ளை முகத்துடன்
கண்ணனின் தாசனை
கண் முன்னே நிறுத்திய கச்சிதமும் -

யாரை நம்பி நான் பொறந்தேன் ? பாடலில்

உங்களால் உரம் ஏற்றப்பட்ட
முதுமை வைராக்கியமும் -

உன்னை அறிந்தால் பாடலில்

உங்கள் உதடுகள் பரப்பிய நம்பிக்கை வெளிச்சமும் -

எண்ணப் பறவை சிறகடித்து.... பாடலில்

மயில் இறகால் மனம் தடவும்
உங்கள் சாமர சங்கீதமும் -

நான் ஆணையிட்டால்... பாடலில்

சத்திய ஆவேசத்துடன்
நீங்கள் வீசிய சாட்டைத் தமிழும் -

அச்சம் என்பது மடமையடா... பாடலில்

நீங்கள் கற்றுத் தரும் குதிரையேற்றமும் வாள் வீச்சும் -

இவை போல இன்னும்.. இன்னும்

எத்தனையோ எடுத்துக் காட்டுகள்...

சங்கீத சரித்திரத்தில்....

காலத்தால் கலைந்து போகாத குரல் இலக்கியங்களாக

இந்த ஞாலத்தை ஆளும்.

காற்றும், தமிழும் உள்ளவரை !


-யாழ் சுதாகர்

T.M.SOUNDARARAJAN SONGS-1

T.M.SOUNTHARARAJAN SONGS-2

TMS SEVENTIES Rares-1.mp3

TMS SEVENTIES Rares-2.mp3

Links

1.டி.எம்.எஸ்...எம்.எஸ்.வி கூட்டணியின் அபார ஆற்றல்...

2.கண்ணதாசனின் பெருந்தன்மை..... -டி.எம்.எஸ்

3. பாடகர்களுக்காக முதன் முதலில்

உரிமைப் போர் நடத்திய டி.எம்.எஸ்

4.விழா மேடைகளில் டி.எம்.எஸ்

5. டி.எம்.எஸ் , சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் அபூர்வ புகைப் படங்கள்.

---- ---- -------- ----- -----

டி.எம்.எஸ் அவர்களின்
இசைப் பயணத்தின்
சுவையான திருப்பங்கள்.


1.மறு வாழ்வு தந்த இறைவன்...டி.எம்.எஸ்...
2.கண்ணதாசனின் பெருந்தன்மை.....டி.எம்.எஸ்.


3.டி.எம்.எஸ்...எம்.எஸ்.வி கூட்டணியின் அபார ஆற்றல்...


4.டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? - சிவாஜி


5.சிவாஜியின் படப் பிடிப்பை ஒத்திப் போட வைத்த டி.எம்.எஸ் பாடல்...


6.பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:


7.'கல்லும் கனியாகும்' ,'அருணகிரி நாதர்', பட்டினத்தார்'...ஆகிய படங்களில் டி.எம்.எஸ் நடித்த காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.


8.லேட்டாக வந்தாலும்....லேட்டஸ்டாக வரும் டி.எம்.எஸ்....


9.பிந்தி வந்து ...முந்தி நிற்கும் டி.எம்.எஸ்...


10.தாமதமாக வந்து பெயரைத் தட்டிச் செல்லும் டி.எம்.எஸ்...


11. பாடகர்களுக்காக முதன் முதலில் உரிமைப் போர் நடத்திய டி.எம்.எஸ்


12.'முப்பெரும் விழா'வில் டி.எம்.எஸ்...[photos]


14.டி.எம்.எஸ் அவர்களுக்கு லக்ஷ்மன் ஸ்ருதியின் மரியாதை...

15.டி.எம்.எஸ் , சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின்

அபூர்வ புகைப் படங்கள்.


யாழ் சுதாகர்,'இனிய இரவு' அருண் இருவரின் சன் நியூஸ் பேட்டி.[Telecasted on 30-09-2007] [NEW]


'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

E MAIL -
yazhsudhakar@gmail.com

PHONE - 9840419112